Mar 17, 2026
Thisaigal NewsYouTube
வீட்டை விட்டு வெளியேறிய விமலன் காணவில்லை
தற்போதைய செய்திகள்

வீட்டை விட்டு வெளியேறிய விமலன் காணவில்லை

Share:

விரக்தியில் இருந்ததாக நம்பப்படும் இந்திய இளைஞன் ஒருவர் வீட்டை விட்டு வெளியேறி 11 நாட்கள் கடந்த நிலையில் அவர் இன்னும் வீடு திரும்பாததுக் குறித்து அவரின் குடும்பத்தினர் அச்சம் தெரிவித்தனர்.

அவரின் பாதுகாப்பிற்கு எதுவும் நேர்ந்திருக்குமா என்ற சந்தேகத்தின் பேரில் அவர் காணாதது குறித்து குடும்பத்தினர் குவாந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

குவாந்தான், கம்போங் பாடாங் தாமான் இம்பியான் - னை சேர்ந்த 37 வயதான விமலன் கந்தசாமி கடந்த ஜனவரி 28 ஆம் தேதி வீட்டை விட்டு வெளியேறியதாக அவரின் சகோதரி கன்னியம்மாள் கந்தசாமி கடந்த ஜனவரி 30 ஆம் தேதி குவாந்தான் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.

தமது சகோதரன் விமலனை பார்த்தவர்கள் அல்லது அவர் இருக்கும் இடத்தை தெரிந்தவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள எண்களுக்கு தொடர்பு கொள்ளலாம் அல்லது அருகில் இருக்கும் காவல்நிலையத்தில் தகவல் தெரிவிக்குமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

Related News