Jul 28, 2026
Thisaigal NewsYouTube
தாயையும் சகோதரியையும் துன்புறுத்திய குற்றத்திற்காக நபருக்கு 9 மாதக் சிறை
தற்போதைய செய்திகள்

தாயையும் சகோதரியையும் துன்புறுத்திய குற்றத்திற்காக நபருக்கு 9 மாதக் சிறை

Share:

தனது தாயை தாக்கியதாகவும், பணம் கொடுக்காததற்காக தனது உடன் பிறந்த சகோதரியை பாராங்கை காட்டி மிரட்டியதாகவும் தேங்காய் பறிக்கும் தொழிலாளி ஒருவருக்கு 9 மாதச் சிறைத்தண்டனை விதிக்க மூவார் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.

36 வயது நவீந்திரன் சுப்ரமணியன் என்ற அந்த தொழிலாளி மாஜிஸ்திரேட் ஃபாடின் தலிலா காலித் முன்னிலையில் இரு குற்றச்சாட்டுகள் வாசிக்கப்பட்டு அக்குற்றத்தை அவர் ஒப்புக் கொண்டதை தொடர்ந்து இத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் கூடிய பட்சம் ஓர் ஆண்டு சிறை அல்லது 2,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படலாம் என்று முதற் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்ட வேளை, குற்றவியல் சட்டம் 352 பிரிவின் கீழ் கூடிய பட்சம் 3 மாதச் சிறை அல்லது 1,000 வெள்ளி அபராதம் அல்லது இரண்டுமே தண்டனையாக விதிக்கப்படும் என்று இரண்டாம் குற்றச்சாட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மார்ச் 17 ஆம் தேதி பிற்பகல் 2 மணியளவில் மூவார், சுங்கை அபோங் - கில் உள்ள தனது வீட்டில் 66 வயதுடைய தாயை கையால் அடித்து துன்புறுத்தியதாகவும் மூத்த சகோதரியை பணம் கொடுக்காத காரணத்திற்காக பாராங்கை காட்டி மிரட்டியதாகவும் அவர் மீது குற்றச்சாட்டப்பட்டிருந்தது.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்