கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மலேசிய ஏர்லைன்சின் பன்னாட்டு விமானச் சேவைகளில் இன்று வெள்ளிக்கிழமை பெரும் பாதிப்பு ஏற்பட்டது.
குறித்த நேரத்தில் புறப்பட வேண்டிய விமானங்கள், மிக கால தாமதமாக புறப்பட்டன. இதனால், பயணிகள் பெரும் அவதிக்குள்ளாகினர். கோலாலம்பூரிலிருந்து சென்னைக்கு காலை 9.30 மணிக்கு புறப்பட வேண்டிய மலேசிய ஏர்லைன்ஸ் விமானமான MH180, சுமார் 4 மணி நேர கால தாமத்திற்கு பின்னர் பிற்பகல் 1.30 மணிக்கு சென்னை வழித்தடத்திற்கு பயணமானது.
கடந்த 25 ஆண்டு காலமாக மலேசிய ஏர்லைன்ஸ் விமானங்களுக்கு உணவு விநியோகிப்பு சேவையை வழங்கி வந்த உணவு நிறுவனமான பிராஹிம் ஃஃபுட் செர்விஸ் நிறுவனத்தின் குத்தகைச் சேவை ஒப்பந்தத்தை அந்த தேசிய விமான நிறுவனம் நேற்று ஆகஸ்ட் 31 ஆம் தேதியுடன் துண்டித்துக் கொண்டதால் உணவு விநியோக்கிப்பில் பெரும் பிரச்னை இன்று காலையில் ஏற்பட்டதாக அறியப்படுகிறது.
இதனால் பன்னாட்டு விமானச் சேவைகளை இயக்க முடியாமல் மலேசிய ஏர்லைன்ஸ் பெரும் தடுமாற்றத்திற்கு இலக்காகியது.
காலையில் கிட்டத்தட்ட 20 விழுக்காடு விமான சேவைகளில் பாதிப்பு ஏற்பட்டதாக அந்த விமான நிறுவனம், இன்று இரவு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது. எனினும், பிற்பகலில் விமானச் சேவைகள் வழக்க நிலைக்கு திரும்பியதாக அது குறிப்பிட்டுள்ளது.
பயணிகளுக்கு ஏற்பட்ட அசெளகரியத்திற்கு மலேசிய ஏர்லைன்ஸ் மன்னிப்பு கோரியது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


