Mar 18, 2026
Thisaigal NewsYouTube
தமிழ், சீனப்பள்ளிகள் மீதான சர்ச்சை வேண்டாம்  பாடத்திட்டத்தில் கவனம் செலுத்துவீர் - முன்னாள் மூத்த அமைச்சர் ரபிடா அசிஸ்  வலியுறுத்து
தற்போதைய செய்திகள்

தமிழ், சீனப்பள்ளிகள் மீதான சர்ச்சை வேண்டாம் பாடத்திட்டத்தில் கவனம் செலுத்துவீர் - முன்னாள் மூத்த அமைச்சர் ரபிடா அசிஸ் வலியுறுத்து

Share:

கோலாலம்பூர், மார்ச் 13 -

இந்த நாட்டில் தமிழ், சீன தாய்மொழிப்பள்ளிகள் தேவையா? தேவையில்லை? என்பது குறித்து வாதிட்டுக் கொண்டும், சர்ச்சை செய்துக் கொண்டும் இருப்பதை காட்டிலும் ஆசிரியர்களின் தரம், பாடத்திட்டத்தின் உள்ளடக்கம் ஆகியவற்றில் கவனம் செலுத்த வேண்டும் என்று முன்னாள் மூத்த அமைச்சர் டான் ஶ்ரீ ரபிடா அசிஸ் வலியுறுத்தியுள்ளார்.

தமிழ், சீன தாய்மொழிப்பள்ளிகள் நாட்டின் ஒற்றுமைக்கு பேதங்களையும் பிளவுகளையும் ஏற்படுத்துகின்றன என்பதில்தான் அரசியல்வாதிகள் சர்ச்சை செய்து கொண்டும் வாதிட்டு கொண்டும் இருக்கின்றனர்.

தம்மை பொருத்தவரை இவ்வாறு சர்ச்சை செய்து கொண்டிருப்பதை காட்டிலும் பள்ளிகளில் கற்றல், கற்பித்தல் தரத்தை உயர்த்துவதற்கு பயிற்சி பெற்ற தரமான ஆசிரியர்களை உருவாக்குவதிலும் பாடத்திட்டத்தின் உள்ளடக்கத்தை மேம்படுத்துவதிலும் தீவிர கவனம் இருக்க வேண்டும் என்று ரபிடா அசிஸ் கேட்டுக் கொண்டார்.

ஒரு நாடு மற்றும் மக்களின் மேன்மைக்கு கல்வித்திட்டங்களின் உள்ளடக்கம் குறித்தே பேச வேண்டுமே தவிர அது தாய்மொழிப்பள்ளியா இல்லையா என்ற பேதங்களை விதைக்கும் சர்ச்சை அவசியமற்றது என்று அம்னோவின் முன்னாள் மகளிர் தலைவியும், முன்னாள் அனைத்துலக வாணிப, தொழித்துறை அமைச்சருமான ரபிடா அசிஸ் வலியிறுத்தியுள்ளார்.

Related News

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

மத்திய கிழக்கை நோக்கிப் பயணிக்கும் அமெரிக்க போர்க்கப்பல் - மலாக்கா நீரிணையைக் கடக்கிறது

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

IGPயின் அலுவலகத்திற்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி இந்திரா காந்தி மனுத் தாக்கல் செய்துள்ளார்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

டாமி தாமஸ்சுக்கு எதிரான 1.9 மில்லியன் ரிங்கிட் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டதை எதிர்த்து மேல்முறையீடு செய்ய அனுமதி கோரியுள்ளார் நஜீப்

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

பயிற்சி மருத்துவரின் மரணத்திற்கும் பாலியல் தொந்தரவு சம்பவத்திற்கும் தொடர்பில்லை

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

வாகனங்களைக் குலோன் செய்யும் கும்பலின் நடவடிக்கை முறியடிக்கப்பட்டது

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்

மாநில அளவிலான ஹரி ராயா பொது உபசரிப்பை ரத்து செய்தது நெகிரி செம்பிலான்