கோலாலம்பூர், வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் தஞ்சோங் மாலிம் ஓய்வெடுக்கும் நிலையத்தில் போலீசாருடன் நடந்த துப்பாக்கி சூடு சம்பவத்தில் இரண்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
நேற்று இரவு 11.32 மணியளவில் துப்பாக்கி சூடு சம்பவம் குறித்து Hulu Selangor செயல்பாட்டு அறைக்கு தகவல் கிடைக்கப் பெற்றதாக Selangor போலீஸ் தலைவர் Datuk Hussein Omar Khan தெரிவித்தார்.
பேரா போலீஸ் அதிகாரிகளின் ஒத்துழைப்புடன் மேற்கொள்ளப்பட்ட இந்த அதிரடி நடவடிக்கையில், சந்தேகிக்கும் வகையில் செயல்பட்ட அவ்விருவர் உட்பட சாம்பல் நிற Proton Waja ரக கார் ஒன்று கண்டறியப்பட்டதாக Hussein Omar கூறினார்.
போலீஸ்காரர்கள் தங்களை தொடர்ந்து கண்காணித்து வருவதை உணர்ந்த அவ்விருவரும், காரில் தப்பிக்க முற்பட்ட போது போலீசார் அவர்களை துரத்திச் சென்று காரை வழிமறித்ததாக Hussein Omar அறிவித்தார்.
அவ்விடத்தில் சந்தேகிக்கும் அந்நபர்கள் கையில் வைத்திருந்த துப்பாக்கியை கொண்டு போலீசாரை பலமுறை தாக்க முயற்சித்த வேளை, அதை தடுப்பதற்காக போலீசார் அவ்விருவரையும் சுடுவதற்கான அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டதாக அவர் மேலும் அறிவித்தார்.
அவ்விருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக Hussein Omar உறுதிப்படுத்தினார்.
அவர்கள் மீது ஏற்கனவே குற்றப்பதிவுகள் இருப்பது தெரிய வந்துள்ளதாகவும் இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 307 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக Hussein Omar தகவல் அளித்தார்.








