Jul 28, 2026
Thisaigal NewsYouTube
காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, அமைச்சரவை முடிவு எடுக்கும்
தற்போதைய செய்திகள்

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டி, அமைச்சரவை முடிவு எடுக்கும்

Share:

காஜாங், மார்ச் 9 -

வரும் 2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்துவதற்கு மலேசியா ஆர்வம் கொண்டுள்ளதா? இல்லையா? என்பது குறித்து அமைச்சரவை விரைவில் முடிவு செய்யும் என்று இளைஞர், விளையாட்டுத்துறை அமைச்சர ஹனா யியோ தெரிவித்துள்ளார்.

காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்துவது தொடர்பில் பல்வேறு அம்சங்களை உள்ளடக்கிய ஆய்வறிக்கையை அமைச்சரவையில் சமர்ப்பிப்பதற்கு ஏதுவாக இளைஞர், விளையாட்டுத்றை அமைச்சு தயாரித்து வருவதாக ஹன்னா இயோ குறிப்பிட்டார்.

2026 ஆம் ஆண்டு காமன்வெல்த் போட்டியை மலேசியா ஏற்று நடத்தும் என்று இப்போதைக்கு தம்மால் எந்த கருத்தும் வெளியிட முடியாது என்று குறிப்பிட்ட ஹன்னா, அமைச்சரவை எடுக்கக்கூடிய முடிவே தீர்க்கமானதாகும் என்றார்.

காமன்வெல்த் விளையாட்டுப்போட்டியை நடத்துவதற்கு நிதி பலம் மட்டுமின்றி வேறு சில அம்சங்களையும் கருத்தில் கொள்ள வேண்டியுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

மலேசியா ஆகக்கடைசியாக கடந்த 1998 ஆம் ஆண்டு காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியை ஏற்று நடத்தியது. காமன்வெல்த் விளையாட்டுப் போட்டியின் நிறைவு விழாவில் மறைந்த முன்னாள் பிரிட்டிஷ் அரசியார் எலிசபெத் கலந்து சிறப்பித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்