கடந்த 2020 முதல் 2022 ஆம் ஆண்டு வரை தவறான நடத்தையில் ஈடுப்பட்டதற்காக, மலேசிய ஊழல் தடுப்பு ஆணையமான எஸ்.பி.ஆர்.எம். மிம் 23 பணியாளர்கள் பணிநீக்கம் உள்ளிட்ட ஒழுங்கு நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.
தவறான நடத்தை, பணியில் அலட்சியம், வேலைக்கு வராதது மற்றும் குற்றச் செயல்களில் ஈடுபடுவது ஆகியவை அந்த பணியாளர்கள் புரிந்த ஒழுக்கக் குற்றங்களாகும் என்று எஸ்.பி.ஆர்.எம். மின் புகார்கள் செயற் குழுப் பிரிவின் தலைவர் டத்தோ டாக்டர் அசரியா மியோர் ஷஹாருடின் தெரிவித்தார்.
அந்த 23 உறுப்பினர்களில், 10 பேர் குற்றச் செயல்களில் ஈடுபட்டதற்காக பணி நீக்கம் செய்யப்பட்டனர் என்றும். ஒழுங்கு நடவடிக்கைக்கு ஆளானவர்களில் பெரும்பாலோர் 10 ஆண்டுகளுக்கும் குறைவாக எஸ்.பி.ஆர்.எம்.மில் பணியாற்றியவர்கள் என்றும் டாக்டர் அசரியா குறிப்பிட்டார்.

Related News

போலீஸ் படையின் முன்னாள் நம்பர் 2-க்கு யுடிஇஎம்மில் புதிய பொறுப்பு

2027 பட்ஜெட்டில் சம்பள உயர்வா? ரமணன் சூசகம்

விசா இல்லா வசதியை வேலைக்காக பயன்படுத்த வேண்டாம் – இந்தியப் பிரஜைகளுக்கு எச்சரிக்கை

25-வது மாடியிலிருந்து விழுந்த கட்டுமானத் தொழிலாளி உயிரிழப்பு

ருக்குன் நெகாராவைக் கேலி செய்ததாக நாடகக் கலைஞர்கள் மீது விசாரணை


