May 22, 2026
Thisaigal NewsYouTube
கைக்குழந்தையை உயிரிழக்கும் அளவிற்கு அலட்சியப்படுத்தியதாக தம்பதியர் மீது குற்றச்சாட்டு
தற்போதைய செய்திகள்

கைக்குழந்தையை உயிரிழக்கும் அளவிற்கு அலட்சியப்படுத்தியதாக தம்பதியர் மீது குற்றச்சாட்டு

Share:

தங்களின் பராமரிப்பில் இருந்த ஒன்பது மாத பெண் குழந்தையை உயிரிழக்கும் அளவிற்கு அலட்சியமாக நடந்து கொண்டதாக கணவன் - மனைவி இருவரும் ஜொகூர் பாரு செஷன்ஸ் நீதிமன்றத்தில் இன்று குற்றச்சாட்டப்பட்டனர்.

31 வயது லிம் ஜென் ஜீ மற்றும் 29 வயது விவியன் லாவ் என்கிற அத்தம்பதியர் நீதிபதி ரசிதா ரோஸ்லி முன்னிலையில் நிறுத்தப்பட்டு குற்றச்சாட்டு வாசிக்கப்பட்ட போது அக்குற்றத்தை அவர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.

குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 50,000 வெள்ளி அபராதம் அல்லது அதிகபட்சம் 20 ஆண்டுகள் சிறை அல்லது இரண்டுமே விதிக்க குற்றவியல் சட்டம் 31(1)(a) மற்றும் 34 ஆகிய பிரிவுகளின் கீழ் குற்றத்தை எதிர்நோக்கியுள்ளனர்.

கடந்த மார்ச் 19 ஆம் தேதியிலிருந்து ஏப்ரல் 25 ஆம் தேதி வரையில் ஜொகூர், ஸ்குடாய் பல்கலைக்கழக பூங்கா, ஜாலான் கெஜாயா - கில் உள்ள ஒரு வீட்டில் வியட்நாம் பெண்ணின் மகளான ஒன்பது மாதக் கைக்குழந்தையை தலையில் காயம் ஏற்படும் அளவிற்கு சரியாக பராமரிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்டதாக அந்த பராமரிப்பாளர்கள் மீது குற்றச்சாட்டப்பட்டுள்ளது.

Related News