Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இரண்டு வயது குழந்தையை சித்ரவதை செய்ததாக நபர் ஒருவர் கைது
தற்போதைய செய்திகள்

இரண்டு வயது குழந்தையை சித்ரவதை செய்ததாக நபர் ஒருவர் கைது

Share:

செராஸ், மே 03-

செராஸ், ஜாலான் குவாரி, தாமான் பிங்கிரான் சேராஸ்- சில் தனது இரண்டு வயது பெண் குழந்தையை சித்ரவதை செய்து படுங்காயத்தை விளைவித்ததாக நபர் ஒருவரை போலீசார் கைது செய்தனர்.

கடந்த ஏப்ரல் 28 ஆம் தேதி பாதிக்கப்பட்ட குழந்தையின் 58 வயது பாட்டி இதுக்குறித்து காவல்நிலையத்திற்கு புகார் அளித்ததாக அம்பாங் ஜெயா மாவட்ட போலீஸ் தலைவர் உதவி ஆணையர் முகமது அசாம் இஸ்மாயில் தெரிவித்தார்.

இதை தொடர்ந்து, 37 வயது அக்குழந்தையின் தந்தையை அம்பாங் ஜெயா மாவட்ட காவல்துறை தலைமையகத்தின் குற்றப்புலனாய்வு பிரிவின் காவல்துறை அதிகாரிகளால் ஜாலான் குவாரியில் கைது செய்யப்பட்டதாக முகமது அசாம் கூறினார்.

கடுமையாக சித்ரவதை செய்யப்பட்டு தலையிலும் உடலிலும் ஏற்பட்ட பலத்த காயங்களினால் பாதிக்கப்பட்ட அக்குழந்தை அம்பாங் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக முகமது அசாம் கூறினார்.

கைது செய்யப்பட்ட அந்நபர் நேற்று தொடங்கி மே 8 ஆம் தேதி வரை 7 நாட்களுக்கு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்