Dec 3, 2025
Thisaigal NewsYouTube
கல்லுடைப்புப்பகுதியில் தொழிலாளர் மரணம்
தற்போதைய செய்திகள்

கல்லுடைப்புப்பகுதியில் தொழிலாளர் மரணம்

Share:

ஈப்போ, சிம்பாங் பூலாய், கெராமாட் பூலாய் என்ற இடத்தில் உள்ள கல்லுடைப்புப்பகுதியில் கற்கள் சரிந்து விழந்ததில் கல்லுடைப்புத் தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.

இன்று காலை 10.45 மணியளவில் நிகழ்ந்த இச்சம்பவத்தில் ஓர் அந்நிய நாட்டுப் பிரஜையான சம்பந்தப்பட்ட தொழிலாளி, சரிந்து விழுந்த கற்கள் மத்தியில் புதையுண்டதாக கூறப்படுகிறது.
பாறைகள் மற்றும் கற்கள் மத்தியில் புதையுண்ட அந்த தொழிலாளியின் உடலை மீட்பதற்கு தீயணைப்ப்படை, கனிம வள இலாகா மற்றும் இதர நிபுணத்துவ துறையைச் சேர்ந்தவர்கள் மீட்பு நடவடிக்கையில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

சம்பந்தப்பட்ட தொழிலாளி மண்வாரி இயந்திரத்துடன் புதையுண்டு இருக்கலாம் என்று நம்பப்படுகிறது.

Related News