சுதந்திர தினம், மலேசியத் தினக் கொண்டாட்டம் ஆகியவற்றை மேலும் விமரிசையாக்கும் பொருட்டு கிள்ளானை தளமாக கொண்ட ஜி.எம் கிள்ளான் மொத்த விற்பனை மையம், "மலேசியா ருமா கித்தா! 2023 - இஸ்திமேவா 66 எனும் மாபெரும் விற்பனை பிரச்சாரத்தை கடந்த செப்டம்பர் 2,3 ஆகிய இரு தேதிகளில் தனது விற்பனை மையத்தில் வெகு சிறப்பாக நடத்தியது.
மலேசியா மடானி : “நம்பிக்கையை பூர்த்தி செய்யும் ஒற்றுமை முன்னெடுப்பு” என்ற தேசியத் தினக் கோட்பாட்டிற்கு ஏற்றவாறு இந்த விற்பனைப் பிரச்சார நிகழ்ச்சி நடைபெற்றது.
பல இன – மதங்களைச் சேர்ந்த தனது வாடிக்கையாளர்களுக்கு பன்முகத்தன்மையும், ஒற்றுமையும் கோட்பாடாக கொண்டு, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததன் மூலம் ஜி.எம் கிள்ளான் மொத்த விற்பனை மையம், சுதந்திரத் தினம் மற்றும் மலேசியத் தினத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
பல இன – மதங்களைச் சேர்ந்த தனது வாடிக்கையாளர்களுக்கு பன்முகத்தன்மையும், ஒற்றுமையும் கோட்பாடாக கொண்டு, இந்த நிகழ்ச்சியை ஏற்பாடு செய்ததன் மூலம் ஜி.எம் கிள்ளான் மொத்த விற்பனை மையம், சுதந்திரத் தினம் மற்றும் மலேசியத் தினத்திற்கு மேலும் சிறப்பு சேர்த்தது.
இது குறித்து பேசிய ஜி.எம் கிள்ளான் மொத்த விற்பனை மையத்தின் தொடர்புத்துறை நிர்வாக அதிகாரி நூருல் சியாசானா ஜோஹர், இந்த நிகழ்வு இரண்டாவது ஆண்டாக அதேவேளையில் முற்றிலும் மாறுப்பட்டதாக நடத்தப்பட்டதாகவும் குறிப்பிட்டார்.
66 ஆவது சுதந்திர தினக் கொண்டாட்டத்திற்கு ஏற்ப இந்த இரண்டு நாள் நிகழ்வுகளில் ஏற்பாடு செய்யப்பட்ட ஒவ்வொரு நடவடிக்கைக்கும் 66 பரிசுகளை வழங்கினோம். குறிப்பாக தேசிய தினத்தையொட்டி “மெர்டேக்கா 66 கப்சூல்” எனும் அங்கம் பிரத்தியேகமாக ஏற்பாடு செய்யப்பட்டதாக நூருல் சியாசானா ஜோஹர் குறிப்பிட்டார்.
வாடிக்கையாளர்கள் செப்டம்பர் 2,3 ஆகிய தேதிகளில் ஜிஎம் கிள்ளான் மொத்த விற்பனை மையத்தின் 2 ரசீதுகள் இணைப்புகள் வாயிலாக 250 வெள்ளி அல்லது அதற்கு மேற்பட்ட விலையில் பொருட்களை வாங்கியிருக்கும் பட்சத்தில் அவர்களுக்கு கவர்ச்சிகரமான பரிசுகள் வழங்கப்பட்டதாக நூருல் சியாசானா ஜோஹர் கூறினார்.
தவிர, ஜி.எம் கிள்ளான் மொத்த விற்பனை மையத்திற்கு வருகை தந்த வாடிக்கையாளர்கள் நம் நாட்டின் பாரம்பரிய கலாச்சாரம் குறித்து அறிந்து கொள்வதற்கு மலேசியாவில் உள்ள பல இனத்தவர் களின் பாரம்பரிய நடனம், பாரம்பரிய விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டன.
மேலும் சிலாங்கூர் மாநில கலாச்சார அடாட் டான் வாரீஸ் சித்திரக்கதையின் 2 சிறப்பு கதாபாத்திரங்களும் மாஸ்கோட் வழி வாடிக்கையாளர்களை மகிழ்வித்தனர்.இந்நிகழ்வில் ஜிஎம் கிள்ளான் மொத்த விற்பனை மையத்தின் வாடிக்கையாளர்கள் மட்டுமல்லாது சுற்றுவட்டார மக்களுக்கும் திரளாக கலந்து சிறப்பித்ததாக நூருல் சியாசானா ஜோஹர் கூறினார்.








