Dec 2, 2025
Thisaigal NewsYouTube
தொழில்நுட்ப திறன்கள் இந்திய மாணவர்களின் நிலையை உயர்த்தும்
தற்போதைய செய்திகள்

தொழில்நுட்ப திறன்கள் இந்திய மாணவர்களின் நிலையை உயர்த்தும்

Share:

கற்றல் கற்றிபித்தலில் ஆர்வம் குறைந்த மாணவர்களுக்குள் நிச்சயம் தொழில்நுட்ப திறன்கள் மறைந்திருக்கும் என்றும், அதன் மூலம் அவர்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்த முடியும் என்றும் கூலிம் மாவட்ட நகராண்மை கழகத் தலைவர் டாக்டர் நட்ஸ்மான் பின் முஸ்தபா தெரிவித்தார்.

இன்று கூலீம், மஹாங், எ.டி.தி.ஈ.சீ (ADTEC) கல்லூரியில் நடைபெற்ற கண்டுபிடிப்பு மற்றும் புத்தாக்கப் போட்டியில் கலந்துகொண்டு பார்வையிட்டப் பின்னர், மாணவர்களிடையே உள்ள தொழில்நுட்ப திறனால் அவர்களின் எதிர்காலத்தை நிர்ணிக்க முடியும் என்று டாக்டர் நட்ஸ்மான் குறிப்பிட்டார்.

மேலும், கல்வியில் சிறந்த அடைவு நிலையைக் கொண்டிருக்க வில்லை என்று துவண்டு விடாமல், அரசாங்கத்தின் கீழ் இயங்கி வரும் தொழில்நுட்ப திறன் கல்லூரிகளில் இணைந்து உயர்கல்வியைத் தொடர்ந்து சிறந்த எதிர்காலத்தை பெறலாம் என்று இந்திய மாணவர்களுக்கு வலியுறுத்தினார்.

Related News