பினாங்கு, தாமான் பெக்காகாவில் பட்டாசு கடை தீப்பிடித்த சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட மூவர் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.
வெடிபொருட்களைக் கையாளுவதில் கவனக்குறைவாக இருந்ததாக குற்றவியல் சட்டத்தின் கீழ் ஒரு பெண் உட்பட மூவர் கடந்த மார்ச் 23 ஆம் தேதி கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டு இருந்தனர்.
மேலும் சில சாட்சிகளிடம் வாக்குமூலம் பெறவும், தீயணைப்புத் துறையின் முழுமையான அறிக்கைக்காகவும் காத்திருப்பதாகப் பினாங்கு போலீஸ் தலைவர் டத்தோ அசிசி இஸ்மாயில் தெரிவித்துள்ளார்.
கடந்த ஞாயிறு அதிகாலை நடந்த இந்த விபத்தில், பட்டாசு கடை முற்றிலும் எரிந்து சாம்பலானது. அருகிலிருந்த ஒரு மோட்டார் சைக்கிள் மற்றும் வீட்டின் குளிரூட்டிகளும் சேதமடைந்தன.








