Jul 28, 2026
Thisaigal NewsYouTube
மூத்த குடிமக்களுக்கு தலா 200 வெள்ளி வழங்கப்பட்டது
தற்போதைய செய்திகள்

மூத்த குடிமக்களுக்கு தலா 200 வெள்ளி வழங்கப்பட்டது

Share:

சிரம்பான், மார்ச் 4 -

சிரம்பான் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் P. குணசேகரன், தனது தொகுதியில் உள்ள 70 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களுக்கு நெகிரி செம்பிலான் மாநில அரசின் சும்பாங்கான் கெசெரியான் தாஹுனான் திட்டத்தின் கீழ் தலா 200 வெள்ளி ரொக்க உதவித்தொகுதியை வழங்கினார்.

கடந்த 15 ஆவது பொதுத் தேர்தலில் நெகிரி செம்பிலான் மாநில அரசாங்கம் அளித்த வாக்குறுதிக்கு ஏற்ப அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் சும்பாங்கான் கெசெரியான் தாஹுனான் உதவித் திட்டத்தில் தங்களை பதிவு செய்து கொண்ட 70 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு இந்த உதவித் தொகை வழங்கி வருகிறது. இந்த உதவித் தொகை இரண்டாவது ஆண்டாக வழங்கப்படுகிறது..

அந்த வகையில் சிரம்பான் ஜெயா, சமூக மண்டபத்தில் தனது சட்டமன்றத் தொகுதியில் கடந்த ஆண்டு 154 பேருக்கு தலா 200 வெள்ளி உதவித் தொகை வழங்கப்பட்ட வேளையில் இவ்வாண்டு 597 பேருக்கு வழங்கப்பட்டுள்ளதாக அதன் சட்டமன்ற உறுப்பினர் குணசேகரன் தெரிவித்தார்.

அனைத்து சட்டமன்றத் தொகுதிகளிலும் 70 வயதை கடந்தவர்கள், இந்த உதவித் தொகையை பெறுவதற்கான கால அவகாசம் இம்மாதம் 31 ஆம் தேதி வரையில் திறக்கப்பட்டு இருப்பதையும் குணசேகரன் சுட்டிக்காட்டினார்.

70 வயதை கடந்தவர்கள், எந்த சட்டமன்றத் தொகுதியில் தங்களை வாக்காளராக பதிவு செய்து கொண்டுள்ளார்களோ, அந்த தொகுதியின் சேவை மையத்தில் தங்களை பதிவு செய்து, கொண்டு இந்த 200 வெள்ளி உதவித் தொகையை பெறலாம் என்று குணசேகரன் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

மூத்த குடிமக்களுக்கு தலா 200 வெள்ளி வழங்கப்பட்டது | Thisaigal News