Dec 3, 2025
Thisaigal NewsYouTube
சட்டத்துறை அலுவலகத்திடம் அறிக்கை சமர்ப்பு
தற்போதைய செய்திகள்

சட்டத்துறை அலுவலகத்திடம் அறிக்கை சமர்ப்பு

Share:

கைதிகளுக்கு பொது மன்னிப்பு வழங்குவதற்கு பரிந்துரைக்கும் பொது மன்னிப்பு வாரியத்தின் அதிகாரம் குறித்து கேள்வி எழுப்பியது தொடர்பில் பாஸ் கட்சித் தலைவர் அப்துல் ஹாடி அவாங்கிற்கு எதிராக புக்கிட் அமான் போலீசார் நடத்திய விசாரணையின் அறிக்கை இன்று சட்டத்துறை அலுவலகத்திடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாக போலீஸ் படைத் தலைவர் டான்ஸ்ரீ ரஸாருதீன் ஹுசைன் தெரிவித்தள்ளார்.

மேற்கொண்டு எடுக்க வேண்டிய சட்ட நடவடிக்கைக்காக அந்த அறிக்கையை சட்டத்துறை அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். கடந்த மாதம் ஜோகூர், மூவார், பக்ரி யில் நடைபெற்ற செராமா வில் உரைநிகழ்த்திய அப்துல் ஹாடி அவாங், கைதிகளுக்கு மன்னிப்பு வழங்க பரிந்துரைக்கும் ஆட்சியாளர்களின் அதிகாரத்தின் கீழ் உள்ள பொது மன்னிப்பு வாரியத்தின் அதிகாரம் குறித்து விமர்சனம் செய்து இருந்ததாக கூறப்படுகிறது.

Related News