Dec 3, 2025
Thisaigal NewsYouTube
மலாய்க்காரர் அல்லாதவர்கள் ஆற்றிய பெரும் பங்களிப்பு
தற்போதைய செய்திகள்

மலாய்க்காரர் அல்லாதவர்கள் ஆற்றிய பெரும் பங்களிப்பு

Share:

மலாய்க்காரர் அல்லாதவர்கள் வந்தேறிகள் என்றும் அவர்கள் உருவாக்கிய அரசியல் கட்சிகள் வந்தேறிகள் கட்சிகள் என்றும் வர்ணித்துள்ள முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமதுவிற்கு சுங்கை பூலோ எம்.பி. டத்தோ ரா. ரமணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.

நாட்டிற்கு முதல் முறையாக 22 ஆண்டு காலமும், பின்னர் ஈராண்டு காலமும் இரண்டு முறை பிரதமர் பதவியை வகித்த மூத்த அரசியல்வாதியாக பார்க்கப்படும் துன் மகாதீரிடம் இதுபோன்ற .இனதுவேஷத் தன்மையில் கருத்து வருவது வியப்பை அளிக்கிறது என்று டத்தோ ரமணன் குறிப்பிட்டார்.

நாட்டில் இன ஒற்றுமையையும், நல்லிணக்கத்தையும் கட்டமைக்க வேண்டிய ஒரு பெரும் தலைவர், குறுகிய மனப்பான்மையில் மலாக்கார அல்லாதவர்களை வந்தேறிகள் என்று கூறுவது, இந்த நாட்டின் மேம்பாட்டிற்கு முதுகெலும்பாக பாடுபாட்ட மலாய்க்காரர் அல்லாதவர்களின் பங்களிப்பை மறந்து விட்டார் என்று பிகேஆர் கட்சியின் தகவல் பிரிவுத் துணைத் தலைவருமான டத்தோ ரமணன் சாடினார்.

Related News