Mar 17, 2026
Thisaigal NewsYouTube
அந்த இருவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு கொண்டு வரப்படலாம்
தற்போதைய செய்திகள்

அந்த இருவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு கொண்டு வரப்படலாம்

Share:

போலீஸ்காரர் ஒருவர் கடும் காயங்களுக்கு ஆளாகும் அளவிற்கு தங்களின் காரில் வேண்டுமென்றே இரண்டு முறை மோதி தள்ளிவிட்டு, தப்பிச் சென்றதாக கூறப்படும் ஓர் இந்திய ஆடவரும், பெண்ணும் பிடிபட்ட நிலையில் அவர்கள் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு கொண்டு வரப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

பேரா, Chemor, Tanjung Rambutan சாலையில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த இந்த சம்பவம் தொடர்பில் தீவிரமாக தேடப்பட்டு வந்த Proton Iriz ரக வாகனத்தை செலுத்திய 33 வயது ஆணும், அவரை திருமணம் செய்து கொள்ளவிருக்கும் 34 வயது பெண்ணும் கைது செய்யப்பட்டு, இன்று ஈப்போ மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டனர்.

புலன் விசாரணைக்கு ஏதுவாக அந்தப் பெண்ணையும், ஆணையும் 7 நாட்களுக்கு தடுத்து வைப்பதற்கு மாஜிஸ்திரேட் சித்தி நோரா ஷாரிஃப அனுமதி அளித்துள்ளார். இந்நிலையில் அந்த இருவர் மீது கொலை முயற்சி குற்றச்சாட்டு கொண்டு வரப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related News