Jul 28, 2026
Thisaigal NewsYouTube
இன்னமும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்
தற்போதைய செய்திகள்

இன்னமும் நம்பிக்கையுடன் காத்திருக்கிறோம்

Share:

கோலாலம்பூர், மார்ச் 8 -

மலேசிய விமான நிறுவனத்திற்கு சொந்தமான MH 370 விமானம் 239 பேருடன் காணாமல் போன துயரச் சம்பவம் நிகழ்ந்து இன்று மார்ச் 8 ஆம் தேதியுடன் 10 ஆண்டுகள் நிறைவு அடையும் நிலையில் அந்த விமானத்தில் பயணத்தவர்களின் நிலை குறித்து இன்னமும் நம்பிக்கையுடன் காத்திருப்பதாக அவர்களின் உறவினர்கள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 2014 ஆம் ஆண்டு மார்ச் 8 ஆம் தேதி கோலாலம்பூரிலிருந்து சீன தலைநகர் பெய்ஜிங்கை நோக்கி புறப்பட்ட MH 370 விமானம் குறித்து விடை காண முடியும் என்று உறவினர்கள் நம்பிக்கை தெரிவித்தனர்.

சீன தலைநகர் பெய்ஜிங்கில் இன்று நடைபெற்ற MH 370 விமானப் பயணிகளுக்கான சிறப்பு பிரார்த்தனைக்கூட்டத்தில், பங்கேற்ற உறவினர்கள், தாங்கள் இன்னும் நம்பிக்கையை இழக்கவில்லை என்று குறிப்பிட்டனர்.

என் மகன் இன்னமும் உயிருடன் இருப்பதாக நம்புகிறேன். அவர் விரைவில் திரும்பி வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது என்று தனது மகனை பறிகொடுத்தவரான Li Shuce நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்