புத்ராஜெயா,பிப்.7
நடப்பு அரசாங்கத்தின் அடைவு நிலை, அது மக்களுக்கு வழங்கி வரும் ஏனைய உதவிகள் குறித்த மடானி ராக்யாட் திட்டத்தின் வாயிலாக இவ்வாண்டில் 6 மாநிலங்களுக்கு விளக்கம் அளிக்கப்படும் என்று தொடர்புத்துறை அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் தெரிவித்துள்ளார்.
வரும் பிப்ரவரி 23 முதல் 25 ஆம் தேதி வரை சிலாங்கூர் மத்தியப் பகுதியிலும், ஏப்ரல் 26 முதல் 28 ஆம் தேதி வரை பினாங்கிலும், ஜுன் 28 முதல் 30 ஆம் தேதி வரை பகாங்கிலும், செப்டம்பர் 27 முதல் 29 ஆம் தேதி வரை சரவாக்கிலும் அக்டோபர் 18 முதல் 20 ஆம் தேதி வரை சபாவிலும் மடானி ராக்யாட் விளக்கமளிப்புக்கூட்டம் நடைபெறும் என்று அமைச்சர் ஃபஹ்மி ஃபட்சில் கூறினார்.








