May 22, 2026
Thisaigal NewsYouTube
கால்வாயில் கிடந்த ஆடவரின் சடலத்தை மீட்க உதவிய நாய்
தற்போதைய செய்திகள்

கால்வாயில் கிடந்த ஆடவரின் சடலத்தை மீட்க உதவிய நாய்

Share:

கெடா, மே 27-

கெடா, அலோர் செட்டார், தாமான் டெர்கா ஜெயா-வில் உடற்பயிற்சி செய்துக்கொண்டிருந்த பெண் ஒருவர், அங்கிருந்த கால்வாயில் ஆடவரின் சடலத்தைக் கண்டு அதிர்ச்சிக்குள்ளானார்.

நேற்று மாலை மணி 6.30 அளவில், 51 வயதுடைய லீ மிங் சிங் எனும் அம்மாது உடற்பயிற்சி செய்துக்கொண்டிந்த போது, அவரது வளர்ப்பு நாய் அங்கிருந்த கால்வாயின் மேலுள்ள இரும்பு மூடியை நுகர்ந்துக்கொண்டும் இடைவிடாது குறைத்துக்கொண்டும் இருந்துள்ளது.

சந்தேகமடைந்த அம்மாது, சம்பந்தப்பட்ட கால்வாயின் இரும்பு மூடியை அகற்றிவிட்டு பார்த்த போது, உள்ளே படுத்திருவாரு கிடந்த ஆடவரின் சடலத்தை கண்டதாக, கோத்தா செட்டார் மாவட்ட போலிஸ் தலைவர் அசிஸ்டன் கோமிசியோனர் சித்தி நோர் சலவதி சாத் தெரிவித்தார்.

இதனிடையே, சம்பவ இடத்திற்கு வந்திருந்த இறந்தவரது மனைவியும் பிள்ளையும் அவ்வாடவரின் அடையாளத்தை உறுதிபடுத்தினர்.

58 வயதுடைய தமது தந்தை நரம்பு ரீதியிலான நோயையும் கடந்த 13 ஆண்டுகளாக அவர் உளவியல் பிரச்சனையைக் கொண்டிருந்ததாகவும் அவரது பிள்ளை கூறினார்.

கைப்பற்றப்பட்ட சடலம் மீது குற்றச்செயலுக்கான கூறுகள் இல்லாத நிலையில், இறப்புக்கான காரணத்தைக் கண்டறிய உடற்கூறு ஆய்வுக்காக சுல்தானா பஹியா மருத்துவமனைக்கு சடலம் கொண்டு செல்லப்பட்டதாக சித்தி நோர் சலவதி சாத் குறிப்பிட்டார்.

Related News