பொதுச் சேவை ஊழியர்கள் குறித்து எதிர்மறையாக விமர்சனம் செய்த தங்கள் கட்சியை சேர்ந்த ஓர் உறுப்பினரின் நடவடிக்கைக்காக கெராக்கான் கட்சி இன்று பகிரங்க மன்னிப்பு கேட்டுக்கொண்டது,
தவிர பெரிக்காத்தான் நேஷனலில் தங்களின் சகாக்களாக விளங்கும் பெர்சத்து மற்றும் பாஸ் கட்சியிடமும் மன்னிப்பு கேட்டுக்கொள்வதாக கெராக்கான் கட்சியின் பொதுச் செயலாளர் மாக் காஹ் கியொங் தெரிவித்தார்.
பொதுச் சேவை ஊழியர்கள் நாட்டிற்கு பெரும் சுமையாகும் என்று கெராக்கான் கட்சி உறுப்பினர் ஒருவர் கூறியிருப்பது தொடர்பில் மாக் காஹ் கியொங் மன்னிப்பு கோரினார்.









