Jul 27, 2026
Thisaigal NewsYouTube
சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

சாலை விபத்தில் மூன்று இளைஞர்கள் உயிரிழந்தனர்

Share:

கிளந்தான், ஏப்ரல் 16-

கிளந்தான், கேத்தேரேஹ்-கோத்தா பாரு நெடுஞ்சாலையின் 9.9 ஆவது கிலோமீட்டர் தொலைத்தூரத்தில் நிகழ்ந்த சாலை விபத்தில் மூன்று பதின்ம வயது இளைஞர்கள் உயிரிழந்தனர்.

நேற்று நள்ளிரவு 12:30 மணியளவில் கேத்தேரேஹ்-விலிருந்து கோத்தா பாருவிற்கு மோட்டார் சைக்கிளில் பயணித்த 19 முதல் 21 வயதிற்கு உட்பட்ட அந்த இளைஞர்கள் கோர விபத்தில் சிக்கி சம்பவ இடத்திலேயே உயிரிழந்ததாக கோத்தா பாரு மாவட்ட போலீஸ் தலைவர் அசிஸ்டென் கொமிசியோனிற் மோஹட் ரோசுடி டவுட் தெரிவித்தார்.

சம்பவ இடத்தில் மோட்டார் சைக்கிள் ஒன்றை தவிர்க்க முற்பட்ட இரண்டு மோட்டார் சைக்கிளோட்டிகள் ஒன்றுடன் ஒன்று மோதிக் கொண்டு விபத்துக்குள்ளாகியது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்ததாக மோஹட் ரோசுடி கூறினார்.

விபத்தில் ஏற்பட்ட பலத்த காயங்களினால் அம்மூவரும் உயிரிழந்ததை மருத்துவ அதிகாரிகள் உறுதிப்படுத்தியதை தொடர்ந்து, மேல் நடவடிக்கைகளுக்காக அவர்களின் உடல் யுனிவர்சிட்டி சைன்ஸ் மலேசியா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக மோஹட் ரோசுடி இன்று ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்