Dec 4, 2025
Thisaigal NewsYouTube
அரசாங்க தேர்வு கண்கானிப்பாளர்களாக பணியாற்றப் பொது மக்கள்
தற்போதைய செய்திகள்

அரசாங்க தேர்வு கண்கானிப்பாளர்களாக பணியாற்றப் பொது மக்கள்

Share:

ஆசிரியர்களின் பணியைக் குறைக்கும் நடவடிக்கையாக முதல் முறையாக கல்வி அமைச்சின் கீழ் நடத்தப்படும் அரசாங்க தேர்வு கண்கானிப்பாளர்களாக பணியாற்றப் பொது மக்களுக்கு திறந்து விடப்படுவதாக கல்வி அமைச்சர் மான்புமிகு பட்லினா சிடேக் தெரிவித்துள்ளார்.

2023 ஆம் ஆண்டுக்கான எஸ் பி எம் அரசாங்கத் தேர்வின் கண்கானிப்பாளராக பணியாற்ற விரும்பும் பொதுமக்கள் கல்வி அமைச்சின் இணைப்பக்கத்தில் உள்ள இணைப்பை சுட்டி விண்ணப்பாரத்தைப் பூர்த்தி செய்யுமாறு அவர் கேட்டுக் கொண்டார்.

65 வயதிற்கு உட்பட்ட குறைந்தப்பட்சம் எஸ்பி எம் வரை கல்விதகுதி வைத்திருக்கும் அனைத்து மலேசியர்களும் கண்காணிப்பாளராக பணியாற்ற விண்ணப்பம் செய்யலாம் என கல்வி அமைச்சர் கூறினர். இந்த விண்ணப்பத்திற்கான இறுதிநாள் அக்டோபர் 31 என்பது குறிப்பிடத்தக்கது.

Related News