Jul 6, 2026
Thisaigal NewsYouTube
ஏர் இந்தியா விமான விபத்தில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை
தற்போதைய செய்திகள்

ஏர் இந்தியா விமான விபத்தில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை

Share:

புத்ராஜெயா, ஜூன்.13-

குஜராத், ஆமதாபாத்தில் விபத்துக்குள்ளான ஏர் இந்தியா விமானப் பேரிடரில் மலேசியர்கள் யாரும் சம்பந்தப்படவில்லை என்று மும்பையில் உள்ள மலேசியத் தூதரகத் துணை அலுவலகம் உறுதிப்படுத்தியுள்ளது.

எனினும் 200 க்கும் மேற்பட்டவர்களைப் பலி கொண்ட இந்த விமான விபத்து குறித்து அங்குள்ள நிலைமையை மலேசியத் தூதரகம் அணுக்கமாகக் கண்காணித்து வருகிறது. அவசியம் ஏற்படும் பட்சத்தில் அது குறித்து அறிக்கை வெளியிடப்படும் என்று அது தெரிவித்துள்ளது.

நேற்று பிற்பகலில் லண்டன் கேட்விக் விமான நிலையத்தை நோக்கிப் புறப்படும் போது ஏர் இந்தியா AI 171 விமானம் விபத்துக்குள்ளாகியிருப்பது குறித்து மலேசிய வெளியுறவு அமைச்சு தனது வருத்தத்தைப் பதிவு செய்துள்ளது.

Related News