ஷா ஆலாம், டிசம்பர்.06-
வெள்ளத்தில் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கக்கூடிய உதவித் தொகையை அதிகரிப்பது குறித்து சிலாங்கூர் மாநில அரசு விவாதிக்கவிருக்கிறது என்று மாநில இளைஞர் மற்றும் விளையாட்டுத்துறை ஆட்சிக்குழு உறுப்பினர் நஜ்வான் ஹாலிமி தெரிவித்தார்.
வெள்ளத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் நிதி உதவி வழங்கப்பட வேண்டும். குறிப்பாக, வெள்ளம் ஏற்படும் அபாயப் பகுதிகளாகக் கருதப்படும் பகுதிகளில் உள்ள மக்களுக்கு கூடுதல் நிவாரண நிதி உதவி வழங்குவது குறித்து உத்தேசிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.
சிலாங்கூர் மாநிலத்தில் இன்றைய நிலவரப்படி 296 பேர் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் பெரும்பகுதியினர் கோலசிலாங்கூர் மற்றும் உலு லங்காட் பகுதிகளைச் சேர்ந்தவர்கள் என்று அவர் விளக்கினார்.








