May 22, 2026
Thisaigal NewsYouTube
எட்டு பேருக்கு தலா 1,500 வெள்ளி அபராதம்
தற்போதைய செய்திகள்

எட்டு பேருக்கு தலா 1,500 வெள்ளி அபராதம்

Share:

கடந்த ஆண்டில் ஒரு மோசடி முதலீட்டுத் திட்டத்தில் தங்களை ஈடுபடுத்திக்கொண்ட குற்றத்தை ஒப்புக்கொண்ட நான்கு ஆண்களுக்கும், நான்கு பெண்களுக்கும் கோலாலம்பூர் மாஜிஸ்திரேட் நீதிமன்றம் தலா 1,500 வெள்ளி அபராதம் விதித்தது.

34 வயது ஆர். தர்மராஜ் பிள்ளை, 25 வயது ஆர். வசந்தகுமார், 26 வயது சுபாஷ் கவிண்டர், 24 வயது முஹம்மது ஹபிசுதீன் முஹம்மது ரஃபி, 24 வயது கீத்திகண்டி, 27 வயது எஸ். ஹேமதர்ஷினி, 21 வயது கஸ்தூரி, 47 வயது B. ஈஸ்வரி ஆகியோரே குற்றத்தை ஒப்புக்கொண்ட அந்த எண்மர் ஆவர்.

இவர்கள் அனைவரும் கடந்த அக்டோபர் 28 ஆம் தேதி கோலாலம்பூர், வங்சா மஜூ- வில் உள்ள ஒரு வீட்டில் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது.

குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் கூடிய பட்சம் 6 மாத சிறை அல்லது அபராதம் அல்லது இரண்டுமே விதிக்க வகை செய்யும் குற்றவியல் சட்டத்தின் கீழ் இந்த எண்மரும் குற்றஞ்சாட்டப்பட்டனர்.

Related News