Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பதின்ம வயது மாணவி கற்பழிப்பு - போலீஸ் அதிகாரி தடுப்புக் காவல்
தற்போதைய செய்திகள்

பதின்ம வயது மாணவி கற்பழிப்பு - போலீஸ் அதிகாரி தடுப்புக் காவல்

Share:

16 வயது மாணவியை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர் நேற்று தடுப்புக் காவலில் வைக்கப்பட்டார்.

பேரா தெங்கா மாவட்டத்தில் பணியில் இருந்த 42 வயது சந்தேக நபர், விசாரணைக்கு உதவுவதற்காக ஜனவரி 31 வரை நான்கு நாட்கள் தடுப்புக் காவலில் வைக்கப்படுவதாக பேராக் காவல்துறைத் தலைவர் முகமட் யூஸ்ரி ஹசன் பஸ்ரி தெரிவித்தார்.

சம்பந்தப்பட்ட காவல்துறை அதிகாரிக்கு எதிரான விசாரணை வெளிப்படையாகவும், விரிவாகவும் மேற்கொள்ளப்படும் என்றும் அவர் உறுதியளித்தார்.

Related News