ஜோகூர், பூலாய் நாடாளுமன்றத் தொகுதி மற்றும் சிம்பாங் ஜெராம் சட்டமன்றத் தொகுதி இடைத் தேர்தல்களுக்கான வாக்களிப்பு இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. பூலாய் தொகுதியில் 61 வாக்களிப்பு மையங்களும், சிம்பாங் ஜெராம் தொகுதியில் 14 மையங்களும் வாக்களிப்புக்காக திறக்கப்பட்டன. காலையில் வானிலை நன்றாக இருந்த போதிலும் மதியம் மேகமூட்டமாக இருந்தது.மலேசிய வானிலைத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று தெரிவித்துள்ளது. மதியம் 12 மணி வரையில் இவ்விரு தொகுதிகளிலும் 30 விழுக்காடு வாக்குகள் பதிவாகியுள்ளன. தேர்தல் முடிவு இரவு 9 மணிக்கு வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுவதாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Related News

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்

சுங்கை ரொம்பின் ஆற்றில் கணவன் மனைவி இறந்து கிடந்தனர்

முதியவர் மாடி வீட்டிலிருந்து கீழே விழுந்து மரணம்

ஓரினப்புணர்ச்சி நடவடிக்கை: போலீசார் விதிமுறையை மீறவில்லை

பெட்ரோல் ரோன் 97, 3 காசு உயர்வு


