துணைப் பிரதமர் டத்தோ ஶ்ரீ அகமாட் ஸாஹிட் ஹமிடி எதிர்நோக்கியுள்ள லஞ்ச ஊழல், நம்பிக்கை மோசடி, மற்றும் சட்ட விரோதப் பணமாற்றம் தொடர்பாக 47 குற்றச்சாட்டுகள் மீதான வழக்கை சட்டத்துறை அலுவலகம் மீட்டுக் கொள்ளவில்லை என்று புதிய சட்டத்துறைத் தலைவர் டத்தூ அஹ்மத் டெர்ரிருதீன் முஹம்மது சலே விளக்கமளித்துள்ளார்.
அகமாட் ஸாஹிட்டுக்கு எதிரான அவ்வழக்கை விசாரணை செய்வதில் இருந்து தற்காலிகமாக நிறுத்துவதற்கு கூட்டரசு அரசியல் அமைப்புச் சட்டம் தனக்கு வழங்கியுள்ள சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி பணி ஓய்வு பெற்றுள்ள முன்னாள் சட்டத்துறைத் தலைவர் இட்ரஸ் ஹருன் அவ்வழக்கை நிறுத்தி வைத்துள்ளாரே தவிர, வழக்கை மீட்டுக் கொள்ள வில்லை என்று அகமட் தெரிருடின் தெளிவு படுத்தினார்.
இவ்வழக்கில் வாபஸ் என்ற வார்த்தை எவ்விடத்திலும் பயன்படுத்தப்பட வில்லை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும் என்று மலேசிய வழக்கறிஞர் மன்றத்திற்கு விளக்கம் அளிக்கும் வகையில் அகமட் தெரிருடின் ஓர் அறிக்கையில் விளக்கியுள்ளார்..








