Jul 28, 2026
Thisaigal NewsYouTube
விபத்தில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்தனர்
தற்போதைய செய்திகள்

விபத்தில் இரண்டு முதியவர்கள் உயிரிழந்தனர்

Share:

ஜோகூர், மார்ச் 4 -

ஜோகூர், குளுவாங்கில் ஜாலான் க்லுவாங் டெக் வா ஹெங் சாலையின் 27 ஆ வது கிலோ மீட்டரில் இரண்டு வாகனங்கள் எதிரும் புதிருமாக மோதிக்கொண்ட விபத்தில் இரண்டு வாகனங்களின் ஓட்டுநர்களும் உயிரிழந்தனர்.

இச்சம்பவம் இன்று பிற்பகல் 2.48 மணியளவில் அந்த குறுகளான சாலையில் நிகழ்ந்தது. மெர்சிடிஸ் பென்ஸ் ஓட்டுநரான 71 வயது முதியவரும், தொயொத்தா ஹைலாக் ஓட்டுநருமான 74 வயது நபரும் தலையில் பலத்த காயங்களுக்கு ஆளாகி சம்பவ இடத்திலேயே மாண்டதாக குளுவாங் மாவட்ட போலீஸ் தலைவர் னிக் மொகமட் அச்மி ஹுசின் தெரிவித்தார்.

லாயாங் -லாயாங் கிலிருந்து ரெங்காம் நோக்கி சென்று கொண்டிருந்த மெர்சிடிஸ் பென்ஸ் வழித்தடத்தில், திடீரென்று நுழைந்த தொயாத்த ஹைலாக் வாகனம் எதிரும் புதிருமாக மோதியதாக அவர் குறிப்பிட்டார். இச்சம்பவம் 1987 ஆம் ஆண்டு சாலை போக்குவரத்து சட்டத்தின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக னிக் மொகமட் அஸ்மி குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்