Oct 16, 2026
Thisaigal NewsYouTube

வெள்ளப் பேரிடர் வழிகாட்டி முறை தயாரிக்கப்பட்டது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
வெள்ளப் பேரிடர் வழிகாட்டி முறை தயாரிக்கப்பட்டது

நிபோங் திபால், நவ. 16-


வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்ளும்
வகையில் கல்விக் கழகங்களுக்கான வெள்ளப் பேரிடர் மேலாண்மை
வழிகாட்டியை கல்வியமைச்சு தயாரித்துள்ளது.

மாணவர்கள், ஆசிரியர்கள், பணியாளர்கள் உள்ளிட்ட கல்விக் கழக
தரப்பினரின் நலன் மற்றும் பாதுகாப்பு விஷயத்தில் அமைச்சு மிகுந்த
அக்கறை கொண்டுள்ளதாக கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் கூறினார்.

இதன் அடிப்படையில் முன்கூட்டியே ஏற்படும் என கணிக்கப்படும்
வடகிழக்கு பருவமழையை எதிர்கொள்வதற்காக முன்னெச்சரிக்கை
நடவடிக்கைகளை தாங்கள் எடுத்து வருவதாக அவர் சொன்னார்.
கல்விக் கழகம் சார்ந்தவர்கள் குறிப்பாக மாணவர்கள் பேரிடரை
எதிர்கொள்வதில் எப்போதும் தயார் நிலையில் இருக்கும் வகையில்
பேரிடர் இடர் தவிர்ப்பு முறை அமல்படுத்தப்பட்டுள்ளது என்றும் அவர்
தெரிவித்தார்.

இன்று தமது நாடாளுமன்றத் தொகுதியான நிபோங் திபால் நாடாளுமன்றத் தொகுதி நிலையிலான
மைலைசென்ஸ பி2, 2024 திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் இதனைக் கூறினார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →