Mar 16, 2026
Thisaigal NewsYouTube
பாலர்பள்ளி மாணவர்களின் பட்டமளிப்பு விழா - வீரப்பன் வருகை
தற்போதைய செய்திகள்

பாலர்பள்ளி மாணவர்களின் பட்டமளிப்பு விழா - வீரப்பன் வருகை

Share:

தம்பின், Dewan Kompleks Perumahan IPD- யில் கடந்த பிப்ரவரி 3 ஆம் தேதி சனிக்கிழமை Ara Maju பாலர்பள்ளி மாணவர்களுக்கு வெகு சிறப்பாக பட்டமளிப்பு விழா நடைபெற்றது.

இப்பட்டமளிப்பு விழாவிற்கு சிறப்பு பிரமுகராக ரெப்பா சட்டமன்ற உறுப்பினரும் நெகிரி செம்பிலான் மாநில அரசு ஆட்சிக்குழு உறுப்பினர் வீரப்பன் சுப்ரமணியம் வருகைப் புரிந்திருந்தார்.

150 மாணவர்கள் உட்பட அக்குழந்தைகளின் பெற்றோர்களும் இவ்விழாவிற்கு வருகை புரிந்து அந்நிகழ்வினை மெருகூட்டினர்.

பாலர்பள்ளியில் கல்வியின் முக்கியத்துவம் மிகவும் அவசியமே. நல்லதொரு அறிவார்ந்த குழந்தை அங்கிருந்துதான் மலர்கிறது என்று வீரப்பன் வலியுறுத்தினார்.

அந்நிகழ்வில் நெகிரி செம்பிலான் அரசாங்கத்தின் கல்வி துறைக்காக தயாரிக்கப்பட்ட முயற்சிகளையும் அவர் முன்வைத்தார்.

இவ்விழாவிற்கு சிறப்பு சேர்க்கும் வகையில் 2,000 வெள்ளி உதவிநிதியை அப்பள்ளியின் ஏற்பாடு செலவிற்காக வீரப்பன் கொடுத்தார்.

Related News