Mar 16, 2026
Thisaigal NewsYouTube
போலீஸ் பிடியில் தப்பி, நீருக்கு இரையாகிய ஆடவர்
தற்போதைய செய்திகள்

போலீஸ் பிடியில் தப்பி, நீருக்கு இரையாகிய ஆடவர்

Share:

பாச்சோக்,பிப்.1
பாச்சோக், ஜெத்தி பெங்காலான் பெத்தாவில் போலீசார் மேற்கொண்ட திடீர் சோதனையில் 39 வயதுடைய ஆடவர் தப்பிச் செல்ல முயன்ற போது ஆற்றின் உள்ளே குதித்து நீரில் மூழ்கி உயிரிழந்தார்.

அந்நபர் தம்மை தற்காத்துக் கொள்ள மீன்பிடிப் படகிலிருந்து கீழே குதிக்க முற்பட்டபோது நீரில் மூழ்கி இறந்ததாக பாச்சோக், மாவட்ட போலீஸ் தலைவர் சுப்ரிதென்டன் முஹமாட் இஸ்மாயில் ஜமாலுடின் தெரிவித்தார்.

நேற்று மாலை 4:36 மணியளவில் போதைப்பொருள் குற்றப்புலனாய்வுத் துறை மேற்கொண்ட ஒப்பி தபிஸ் காஸ் சோதனையின் போது அந்நபர் தப்பிச் செல்ல முயன்று உயிரிழந்ததாக ஓர் அறிக்கையில் முஹமாட் இஸ்மாயில் இன்று வெளியிட்டார்.

தீயணைப்பு, மீட்பு படை மற்றும் பாச்சோக்விலுள்ள மலேசிய குடிமைத் தற்காப்பு படை ஆகியவற்றின் உதவிகளுடன் தேடுதல் பணி மேற்கொள்ளப்பட்டு அந்நபரின் உடல் மீட்கப்பட்டதாக முஹமாட் இஸ்மாயில் கூறினார்.

Related News