இவ்வாண்டு ஜனவரி மாதம் தொடங்கி நேற்று இணையத்தளம் வழி மோசடி செய்யப்பட்ட சம்பவங்கள் 2079 ஆக பதிவாகி உள்ளது என ஜொகூர் மாநில போலீஸ் தலைவர் டத்தோ கமருல் ஜமான் மாமத் தெரிவித்தார். கடந்த 2022 ஆம் ஆண்டு பதிவாகிய சம்பவங்கள் காட்டிலும் இவ்வாண்டு 279 சம்பவங்கள் அதிகமாகி உள்ளது என அவர் கூறினார்.
இணையத் தளம் வழி மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருவதால், பொதுமக்கள் மிக கவனமாக செயல்படவேண்டும் எனவும் முகம் தெரியாத நபர்களோடு வங்கி கணக்கு விபரங்களையும் வங்கியில் உள்ள பண சேமிப்பு தொடர்பாகவும் யாரிடமும் ப்கிர வேண்டாம் என கமாரூல் கேட்டுக் கொண்டார்.








