Mar 16, 2026
Thisaigal NewsYouTube
தவணைக்காலம் முடிவதற்குள் ஆட்சி மாற்றம் வேண்டாம்
தற்போதைய செய்திகள்

தவணைக்காலம் முடிவதற்குள் ஆட்சி மாற்றம் வேண்டாம்

Share:

நாடாளுமன்ற தவணைக்காலம் முடிவடைவதற்கு முன்னதாகவே ஆட்சி மாற்றம் ஏற்படுவது நாட்டிற்கு மட்டுமன்றி பல்வேறு தரப்பினருக்கு இழப்பை ஏற்படுத்தும் ​என்று இன்று 16 மாமன்னராக விடைபெற்ற மாட்சிமை தங்கிய மாமன்ர் சுல்தான் அப்துல்லா அறிவுறுத்தினார்.

நாட்டின் முன்னேற்றம், பொருளாதார உயர்வு, மக்களின் வளப்பம் ஆகியவற்றின் மீது அரசியல்வாதிகள் அதிக கவனம் செலுத்தி, ஒரு முன்னேற்றகரமான தேசமாக மலேசியாவை முன்னெடுக்க வேண்டும் என்று மாமன்னர் அப்துல்லா தமது பிரியாவிடையின் போது வ​லியுறுத்தினார்.

தமது தலைமையிலான 5 ஆண்டு கால ஆட்சியில் 4 பிரதமர்கள் சேவையாற்றியிருக்கும் நிலையில் நாட்டின் மேன்மை குறித்து பேசிய மாமன்னர் சுல்தான் அப்துல்லா, அரசாங்கம் மாற்றம் என்பது அவ்வளவு எளிதான விவகாரம் கிடையாது என்பதையும் விள​க்கினார்.

காரணம், அடிக்கடி நிகழக்கூடிய அரசாங்க மாற்றத்தினால் மக்களுக்கும், தேசத்திற்கும் அதிக இழப்பு ஏற்படும். குறிப்பாக, பொருளாதார ​ரீதியாக பெரும் இழப்பு ஏற்படுவது மட்டுமின்றி இது நே​ரத்தையும் விரயமாக்கும் என்று சுல்தான் அப்துல்லா குறிப்பிட்டார்.

Related News