Oct 10, 2026
Thisaigal NewsYouTube

உயிர்க் காக்கும் திறன்களில் 10,000 தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது

திசைகள் செய்திப்பிரிவு
Share:
உயிர்க் காக்கும் திறன்களில் 10,000 தொழிலாளர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட உள்ளது

புத்ராஜெயா, ஜூன்.12-

மனிதவள அமைச்சு 10 ஆயிரம் தொழிலாளர்களுக்கு அடிப்படை முதலுதவி திறன்களில் பயிற்சி அளிக்கும் முயற்சியைத் தொடங்குவதன் மூலம் தொழிலாளர்களின் நலன் மற்றும் அவர்களின் பாதுகாப்பைக் காப்பதற்கான தனது உறுதிப்பாட்டை தொடர்ந்து வலுப்படுத்துகிறது என்று மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம் தெரிவித்துள்ளார்.

இந்த முயற்சியானது, மனித வள அமைச்சு, மலேசிய செம்பிறை சங்கம் மற்றும் அனைத்துலக செஞ்சிலுவைச் சங்கம் முதலிய கூட்டமைப்பு ஆகியவற்றுக்கு இடையிலான ஒரு வியூக ஒத்துழைப்பின் மூலம் உறுதிச் செய்யப்படுகிறது என்று அவர் குறிப்பிட்டார்.

இதன் மூலம் வேலையிலும் சமூகத்திலும் அவசர நிலைகளை எதிர்கொள்ள தொழிலாளர்களின் தயார் நிலையை வலுப்படுத்துகிறது என்று அமைச்சர் ஸ்டீவன் சிம் குறிப்பிட்டார்.

ஜெனீவாவில் உள்ள அனைத்துலக செஞ்சிலுவை மற்றும் செம்பிறைச் சங்கங்களின் தலைமையகத்திற்கு அதிகாரப்பூர்வ வருகை மேற்கொண்ட மனித வள அமைச்சர் ஸ்டீவன் சிம், அங்கு வெளியிட்டுள்ள ஓர் அறிக்கையில் இதனைத் தெரிவித்தார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →
மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

மலாக்காவில் 1 வயது சிறுவன் மர்ம மரணம்: மியன்மார் நாட்டினர் நால்வர் கைது

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

புகைமூட்ட தடுப்பு நடவடிக்கை: இந்தோனேசியாவின் பதிலுக்காக காத்திருப்பதாக அமைச்சர் தகவல்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

இறப்புச் சான்றிதழ்: நேபாளத்தின் முன்மொழிவை ஏற்கத் தயாராகும் மலேசியக் குடும்பங்கள்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

காதலுக்கு மகுடம் சூட்டிய திருமணம் - சையிட் சாடிக்-பெல்லா அஸ்தில்லா இல்லறத்தில் இணைந்தனர்

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

பொருளாதார வளர்ச்சிக்கும் மக்கள் நலனுக்கும் முக்கியத்துவம்: 2027 வரவு செலவுத் திட்டத்திற்கு வங்கிகள், ஆய்வு நிறுவனங்கள் பாராட்டு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு

வரவு செலவுத் திட்டம் 2027: குறைந்தபட்ச ஊதியத்தை ரிம 2,000 ஆக உயர்த்த இபிஎஃப் ஆதரவு