லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டுள்ள சபா அம்னோ தலைவரும், கினாபாத்தாங்ஙான் நாடாளுமன்ற உறுப்பினருமான புங் மொக்தார் ராடின் மற்றும் அவரின் மனைவி சிசி இசெட் சாமாட் ஆகிய இருவருவரின் விடுதலையை எதிர்த்து பிராசிகியூஷன் தரப்பு மேல்முறையீடு செய்துள்ளது.
15 கோடி வெள்ளி மதிப்புள்ள ஃபெல்க்ரா முதலீட்டு திட்டம் தொடர்பில் லஞ்சம் பெற்றதாக குற்றஞ்சாட்டப்பட்ட இத்தம்பதியரை கடந்த செப்டம்பர் 7 ஆம் தேதி கோலாலம்பூர் செஷன்ஸ் நீதிமன்றம் விடுதலை செய்தது.
அவ்விவருவரையும் எதிர்வாதம் செய்ய அழைத்தது மூலம் நீதிமன்றம் தவறு இழைத்து இருப்பதாக உயர் நீதிமன்ற நீதிபதி அசார் அப்துல் ஹமிட் தீர்ப்பு அளித்து இருந்தார்.
15 கோடி வெள்ளி முதலீட்டில் Public Mutual யூனிட் டிரஸ்ட் பங்குகளை ஃபெல்க்ரா வாங்குவதற்கான அனுமதியை பெற்று தருவதற்கு 22 லட்சம் வெள்ளியையும், 2 லட்சத்து 62 ஆயிரத்து 500 வெள்ளியையும் லஞ்சமாக பெற்றதாக 65 வயதான புங் மொக்த்தார் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார். அவரின் இந்த செயலுக்கு உடந்தையாக இருந்ததாக அவரின் மனைவி சிசி இசெட் சாமாட் இசெட் சாமாட்டும் குற்றஞ்சாட்டப்பட்டு இருந்தார்.

Related News

குளுவாங்கில் கைதி தப்பியோட்டம்: அடுத்த 1 மணி நேரத்திற்குள் பிடித்த போலீஸ்

வரலாற்றுச் சிறப்புமிக்க பகடி வதை எதிர்ப்புச் சட்ட மசோதா 2025-ஐ நிறைவேற்றியது மலேசியா: புதிய தீர்ப்பாயம் அமைப்பு

13 வயதிற்குட்பட்டவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்தத் தடை– அமைச்சர் ஃபாமி ஃபாட்சீல் தகவல்

டுரியான் துங்கால் துப்பாக்கிச் சூடு: விரிவான விசாரணைக்கு புக்கிட் அமானில் சிறப்புக் குழு அமைப்பு

பந்தை எடுக்கும் முயற்சியில் கால் இடறி கீழே விழுந்து ஆடவர் மரணம்


