Dec 3, 2025
Thisaigal NewsYouTube
வாடகை வீட்டில் தாயும் இரு பிள்ளைகளும் இறந்து கிடந்தனர்
தற்போதைய செய்திகள்

வாடகை வீட்டில் தாயும் இரு பிள்ளைகளும் இறந்து கிடந்தனர்

Share:

அம்பாங், கம்போங் பாருவில் வாடகை வீடு ஒன்றில் மாது ஒருவரும் அவரின் இரு பிள்ளைகளும் இறந்து கிடந்தது இன்று காலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

சிகை அலங்கரிப்புக்குரிய ஒப்பனைப் பொருட்கள் விற்பனை பணிப்பெண்ணான 42 வயதுடைய அந்த மாதுவும் 14 வயது மகனும், 15 வயது மகளும் வீட்டின் அறையில் இறந்து கிடந்தது காலை 7.30 மணி அளவில் கண்டு பிடிக்கப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர்.

எரிவாயு கலனில் இருந்து வெளியேறிய நச்சு வாயுவை அவர்கள் நுகர்ந்திருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது.

24 மணி நேரத்திற்கு முன்பு அவர்கள் இறந்திருக்கக் கூடும் என்று நம்பப்படும் நிலையில் சவப்பரிசோதனைக்காக அந்த மூவரின் சடலங்களும் அம்பாங் மருத்துவமனை சவக் கிடங்கிற்குக் கொண்டு செல்லப்பட்டன.

Related News