சுங்கை பட்டாணி, மே 29-
கடந்த 2006 ஆண்டு கெடா, சுங்கை பட்டாணி, தாமான் ரியா - விலுள்ள சிந்தா சாயாங் கிளப்புக்கு அருகில் 25 வயதுடைய பெண் நிர்வாகியை பாலியல் பலாத்காரம் புரிந்து கொடூரமாக கொலை செய்து சடலத்தை புதரில் வீசிய குற்றத்திற்காக மரணத்தண்டனை விதிக்கப்பட்ட டத்தோ அந்தஸ்த்தைக் கொண்ட பிரமுகர் ஒருவரின் மகனின் தண்டனையை புத்ராஜெயா கூட்டரசு நீதிமன்றம் இன்று உறுதி செய்தது.
தனக்கு எதிரான தண்டனையை குறைக்கும்படி ஷஹரில் ஜாபர் என்ற அந்த வர்த்தகர் செய்து கொண்ட மேல் முறையீட்டை நிராகரிப்பதாக மூவர் அடங்கிய நீதிபதிகள் குழுவினர்களுக்கு தலைமையேற்ற நீதிபதி ஹர்மிந்தர் சிங் தலிவால் தமது தீர்ப்பில் தெரிவித்தார்.
இச்சம்பவத்தில் கொலையுண்ட வட மலேசிய பல்கலைக்கழக பட்டதாரியான ச்சீ கைக் யப் என்ற அந்த இளம் பெண் எத்தகைய சித்ரவதைக்கு ஆளாகியிருப்பார் என்பதை நீதிமன்றம் கருத்தில் கொள்வதாக நீதிபது தமது தீர்ப்பில் சுட்டிக் காட்டினார்.
மெதுவோட்டத்தில் ஈடுபட்டிருந்த அந்த இளம் பெண் பலவந்தமாக கடத்தி செல்லப்பட்டு பாலியல் வன்கொடுமை புரிந்து கொல்லப்பட்டிருக்கிறார்.
சம்பந்தப்பட்ட டத்தோ மகனுக்கு அலோர் ஸ்டார் உயர்நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டில் விதிக்கப்பட்ட தீர்ப்பில் தவறில்லை என்று நீதிபதி ஹர்மிந்தர் தெளிவுப்படுத்தினார்.
ஒரு தொழிலதிபரின் மகனின் இந்த செயல், பட்டபகலில் நிகழ்ந்திருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது என்பதையும் நீதிமன்றம் கருத்தில் கொள்வதாக நீதிபதி தீர்ப்பில் குறிப்பிட்டார்.
கடந்த 2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் நிகழ்ந்த இந்த கொலை வழக்கில் பிடிபப்பட்டு பின்னர்
ஆஸ்திரேலியாவிற்கு தப்பிச் சென்ற Shahril Jaafar 6 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் பிடிப்பட்டார் என்பது குறிபிடத்தக்கது.








