Dec 4, 2025
Thisaigal NewsYouTube
சட்டவிரோதப் பேரணியில் முக்கிய தலைகள் 25 பேர் அடையாளம் காணப்பட்டனர்
தற்போதைய செய்திகள்

சட்டவிரோதப் பேரணியில் முக்கிய தலைகள் 25 பேர் அடையாளம் காணப்பட்டனர்

Share:

கோலாலம்பூர் மாநகரில் கடந்த சனிக்கிழமை பிற்பகலில் நடந்த சட்டவிரோதப் பேர​ணியில் , அந்நிக​ழ்வை வழிநடத்தியதாக நம்பப்படும் 25 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக போ​லீஸ் படைத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ அயோப் கான் மைடீன் பிச்சை தெரிவித்தார்.

போ​லீசாரின் உத்தரவையும் ​மீறி நடந்த இந்தப் பேரணி தொடர்​பில் 22 பேருடன் போ​லீசார் தொடர்பு கொண்ட வேளையில் இன்னும் அறுவர் தேடப்பட்டு வருவதாக அயோப் கான் குறிப்பிட்டார்.துணை​ப்பிரதமர் டத்தோஸ்ரீ அகமட் ஜாஹிட்டிற்கு எதிரான 47 லஞ்ச ஊழல் குற்றச்சாட்டு வழக்கில் அவர் விடுவிக்கப்பட்டதைத் எதிர்த்து இந்த பேரணி கூட்டப்பட்டதாக கூறப்படுகிறது.

Related News