May 22, 2026
Thisaigal NewsYouTube
முதலீட்டு மோசடியில் கணக்காளர் 2.2 மில்லியனுக்கும் அதிகமாக இழப்பு
தற்போதைய செய்திகள்

முதலீட்டு மோசடியில் கணக்காளர் 2.2 மில்லியனுக்கும் அதிகமாக இழப்பு

Share:

Johor - ரில் ஒரு முதலீட்டு மோசடியில் கணக்காளர் ஒருவர் 2.2 மில்லியன் வெள்ளிக்கும் அதிகமாக இழந்தார்.

இச்சம்பவம் குறித்து நேற்று 75 வயது பாதிக்கப்பட்ட அந்த கணக்காளர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததாக Johor போலீஸ் தலைவர் Komisioner M Kumar தெரிவித்தார்.

கடந்த ஆண்டு டிசம்பர் 19 ஆம் தேதி WhatsApp - பில் முதலீடு தொடர்புடைய விளம்பரம் ஒன்றை பாதிக்கப்பட்டவர் கண்டறிந்ததாகவும் அதில் ஆர்வம் செலுத்தி குறிப்பிட்ட தொகையை முதலீடு செய்ய ஒப்புக் கொண்டதும் முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்ததாக M Kumar கூறினார்.

இதுக்கு‌றி‌த்து குற்றவியல் சட்டம் 420 ஆவது பிரிவின் கீழ் விசாரணை மேற்கொண்டு வருவதாக அவர் மேலும் தகவல் அளித்தார்.

Related News