May 22, 2026
Thisaigal NewsYouTube
பொழுதுபோக்கு மையத்தில் சண்டையிட்ட நபர்கள் கைது
தற்போதைய செய்திகள்

பொழுதுபோக்கு மையத்தில் சண்டையிட்ட நபர்கள் கைது

Share:

Skudai, Taman Sutera- வில் உள்ள ஒரு பொழுதுபோக்கு மையத்தில் சண்டையிட்டு கொண்ட 11 ஆண்கள் உட்பட பெண்களும் கைது செய்யப்பட்டனர்.

கடந்த ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு 12:05 மணியளவில் குறிப்பிடப்பட்ட பொழுதுபோக்கு மையத்தில் 11 ஆண்கள் உட்பட 22 முதல் 33 வரை வயதுடைய பெண்களும் கைது செய்யப்பட்டதாக ஜொகூர் பாரு மாவட்ட போலீஸ் தலைவர் ACP Belveer Singh Mahindar Singh தெரிவித்தார்.

இச்சம்பவத்தை குறித்து சமூக வலைத்தளத்தில் பரவலாக பகிரப்பட்டு வந்த 3 நிமிட 2 வினாடி காணொளியின் அடிப்படையில் இந்நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாக Belveer Singh கூறினார்.

கைது செய்யப்பட்ட சந்தேகிக்கும் நபர்கள் நேற்று வரையில் தடுப்பு காவலில் வைக்கப்பட்டதுடன் இரண்டாவது விசாரணைக்காக இன்றுவரையில் ரிமாண்டில் அனுமதிக்கப்பட்டிருப்பதாக அவர் ஓர் அறிக்கையில் நேற்று குறிப்பிட்டார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 148 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதுடன் குற்றம் என்று நிரூபிக்கப்பட்டால் 5 ஆண்டு சிறைத்தண்டனை அல்லது பிரம்படி அல்லது இரண்டுமே வழங்கப்படலாம் என்று Belveer Singh விளக்கினார்.

Related News