May 22, 2026
Thisaigal NewsYouTube
உணவில் நச்சுத்தன்மை இருப்பதை சுகாதார அமை‌ச்சக‌ம் உறுதிப்படுத்தியுள்ளது
தற்போதைய செய்திகள்

உணவில் நச்சுத்தன்மை இருப்பதை சுகாதார அமை‌ச்சக‌ம் உறுதிப்படுத்தியுள்ளது

Share:

கடந்த வாரம், Selangor, Gombak - கில் நச்சுத்தன்மை உணவை உட்கொண்டு உயிரிழந்த இரண்டு வயது சிறுமி உட்பட 17 வயது மாணவியின் சம்பவ தொடர்பில், முழுமையான தகவல்களை கிடைக்க பெறுவதற்கு சுகாதார அமை‌ச்சக‌ம் செயல்பட்டு வருகிறது.

அந்த உணவில் Salmonella என்ற bacteria கலந்திருப்பதை சுகாதார அமை‌ச்சக‌ம் இதுவரையில் உறுதிப்படுத்தியிருப்பதாக அதன் அமைச்சர் Datuk Seri Dr Dzulkefly Ahmad கூறினார். இருந்த போதிலும், அதன் முழு அறிக்கைக்காக தமது தரப்பு காத்திருப்பதாக Dr Dzulkefly Ahmad தெரிவித்தார்.

கடந்த சனிக்கிழமை, Selangor, Gombak - கில் நடைபெற்ற இஸ்லாமிய அறப்பணித் திட்டத்தின் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு காலை உணவை உட்கொண்ட 247 பேரில் 82 பேர் உணவின் நச்சுத்தன்மை காரணமாக பா‌தி‌ப்புற்றதாக ஊடகங்கள் கூறியிருந்தன.

Related News