Jul 28, 2026
Thisaigal NewsYouTube
நீண்ட நேரம் காத்திருந்தல் ஏற்பட்ட சண்டைக்கு காரணம்
தற்போதைய செய்திகள்

நீண்ட நேரம் காத்திருந்தல் ஏற்பட்ட சண்டைக்கு காரணம்

Share:

ஜொகூர் பாரு, சவுத்கீ- யில் உள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் நீண்ட நேரம் காத்திருந்ததுதான் கர்ப்பணி காசாளருக்கும் பெண் வாடிக்கையாளருக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்திற்கு காரணம் என்று தெரியவந்துள்ளது.

அந்த வாக்குவாதத்தில் கர்ப்பிணி காசாளர்-யை பெண் வாடிக்கையாளர் குத்தியதை தொடர்ந்து பாதிக்கப்பட்டவர் காவல்நிலையத்தில் புகார் அளித்திருப்பதாக ஜொகூர் பாரு போலீஸ் தலைவர் ஏசிபி ரவுப் செலமட் கூறினார்.

நேற்று மாலை 6:32 மணியளவில் இச்சம்பவம் தொடர்பாக 25 வயதுடைய பாதிக்கப்பட்ட பெண் தாக்கப்பட்டதில் கண்ணின் கீழ் காயமடைந்திருப்பதுடன் வீக்கம் ஏற்பட்டிருக்கும் நிலையில் காவல் நிலையத்திற்கு வந்ததாக ரவுப் செலமட் விவரித்தார்.

ஒரு பொருளை வாங்குவதை ரத்து செய்வதற்கு நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டியிருந்ததால் கோபமடைந்து பாதிக்கப்பட்டவரை சந்தேக்கிக்கும் பெண் காயப்படுத்தியதாக முதற்கட்ட விசாரனையில் தெரியவந்ததாக அவர் குறிப்பிட்டார்.

இதுக்குறித்து குற்றவியல் சட்டம் 323 பிரிவின் கீழ் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருவதாக ரவுப் செலமட் இன்று தெரிவித்தார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்