Jul 28, 2026
Thisaigal NewsYouTube
முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக போலீஸ் புகார்
தற்போதைய செய்திகள்

முன்னாள் சட்டமன்ற உறுப்பினருக்கு எதிராக போலீஸ் புகார்

Share:

வருமான வரியை, தாம் செலுத்தவில்லை என்று கூறி காணொளி வெளியிட்டதாக கூறப்படும் டிஏபி- யின் முன்னாள் அரசியல்வாதி சதீஸ் முனியாண்டிக்கு எதிராக ஒற்றுமைத்துறை துணை அமைச்சர் சரஸ்வதி கந்தசாமி போலீஸ் புகார் செய்துள்ளார்.

பினாங்கு , பாகான் டாலாம் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான சதீஸ் முனியாண்டி, தமக்கு எதிரான குற்றச்சாட்டை, காணொளி வழி சமூக வலைத்தளங்களில் பதிவேற்றம் செய்துள்ளதாக சரஸ்வதி கந்தசாமி குறிப்பிட்டுள்ளார்.

தமக்கு எதிராக கூறப்பட்டுள்ள இந்த குற்றச்சாட்டின் உண்மைத் தன்மையை ஆராயாமல் ஒரு லட்சத்து 90 ஆயிரம் வெள்ளி வருமான வரியை செலுத்தாமல் தாம் இருந்து வருவதாக கூறி, வாட்சப்- பிலும் ஒரு போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளதாக துணை அமைச்சர் குறிப்பட்டார்.

ஒற்றுமை அரசாங்கத்தை சேர்ந்த ஓர் அரசியல்வாதி மற்றும் துணை அமைச்சர் என்ற முறையில் தமது பெயருக்கு களங்கத்தை ஏற்படுத்தும் தீய நோக்குடன் இத்தகைய பொய்யான செய்திகள் பகிரப்பட்டு வருவதாக சரஸ்வதி கந்தசாமி குற்றஞ்சாட்டினார்.

துணை அமைச்சர் சரஸ்வதி நேற்று மாலை 3.45 மணியளவில் போலீஸ் புகார் செய்து இருப்பதை புத்ராஜயா மாவட்ட போலீஸ் தலைவர் அஸ்மதி அப்துல் அஜீஸ் இன்று உறுதிபடுத்தினார். இப்புகார், குற்றவியல் சட்டம் 500 ஆவது பிரிவின் கீழ் விசாரணை செய்யப்பட்டு வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்

நெட்வொர்க் ஸ்கூல் வணிக உரிமம் ரத்து - மேல்முறையீடு எதுவும் செய்யப்படவில்லை என மாநில ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ மொஹ் ஜப்னி தகவல்