கெடா, baling வட்டாரத்தில் வீடு புகுந்து கொள்ளையிட்டு வந்ததாக நம்பப்படும் 4 ஆடவர்களையும் இரு பெண்களையும் போலீசார் கைது செய்துள்ளனர்.
பூலாய்,மற்றும் பொங்கோர் ஆகிய இடங்களில் போலீசார் நடத்திய சோதனையில் 23 க்கும் 56க்கும் இடைப்பட்ட வயதுடைய அந்த அறுவரும் கைது செய்யப்பட்டதாக baling மாவட்ட போலீஸ் தலைவர் samsudin mahmat தெரிவித்தார்.
இக்கும்பல் பிடிபட்டதன் மூலம் வீடுகள், கடைகள் மற்றும் பள்ளிகளில் கொள்ளை அடிக்கப்பட்ட 19 சம்பவங்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளதாகவும், இதனால் 1 லட்சத்து 50 ஆயிரம் வெள்ளி இழப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.








