May 22, 2026
Thisaigal NewsYouTube
மியன்மார் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்
தற்போதைய செய்திகள்

மியன்மார் பிரஜை கைது செய்யப்பட்டுள்ளார்

Share:

கோலாலம்பூர், மார்ச் 14 -

கடந்த சனிக்கிழமை ரோஹிங்யா மாது மீது பெட்ரோல் ஊற்றி தீயிட்ட சம்பவம் தொடர்பில் சந்தேகத்தின் பேரில் மியன்மார் பிரஜை ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.

36 வயதுடைய அந்த மியன்மார் பிரஜை, செராஸில் வளைத்துப்பிடிக்கப்பட்டதாகவும், விசாணைக்கு ஏதுவாக அவரை 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைப்பதற்கு போலீசார் நீதிமன்ற ஆணையைப் பெற்றுள்ளதாக செராஸ் மாவட்ட போலீஸ் தலைவர் சாம் ஹலிம் ஜமாலுடின் தெரிவித்தார்.

தவிர இச்சம்பவத்தில் சம்பந்தப்பட்டுள்ளதாக சந்தேகிக்கப்படும் மற்றொரு மியன்மார் பிரஜையான ஒரு பெண்ணை போலீசார் தேடி வருவதாக அவர் குறிப்பிட்டார்.

Related News