வரவிருக்கும் பினாங்கு, SUNGAI BAKAP சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலுக்கான பரப்புரைகளில், தனது PKR கட்சியைச் சேர்ந்த வேட்பாளரை ஆதரித்து களமிறங்க போவதில்லை எனும் பிரதமர் DATUK SERI ANWAR IBRAHIM-மின் முடிவு விவேகமானது என TASMANIA பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அரசியல் ஆய்வாளர் JAMES CHIN கூறினார்.
நடப்பில், மலாய் வாக்காளர்களிடையே, ANWAR மீதான செல்வாக்கு வலுவற்றதாக இருந்து வருகின்றது.
SUNGAI BAKAP தொகுதிக்கு அவர் வருகை புரிந்தால், டீசல் விலை உயர்வு, வாழ்க்கை செலவின அதிகரிப்பு உள்ளிட்ட விவகாரங்கள் பேசுப்பொருளாக மாறி, ஆளும் அரசாங்கத்தின் மீது எதிர்மறையான கண்ணோட்டங்களை ஏற்படுத்தக்கூடும்.
அதன் காரணமாக, மலாய் வாக்காளர்கள், ஒற்றுமை அரசாங்கத்தின் வேட்பாளருக்கு ஆதரவை வழங்காமல் போகும் சூழல் உள்ளது.ஆகையால், SUNGAI BAKAP இடைத்தேர்தலில் பங்கேற்பதைவிட, ANWAR தள்ளி இருப்பதே அவருக்கு நல்லது என JAMES CHIN கூறினார்.








