Jul 28, 2026
Thisaigal NewsYouTube
அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை
தற்போதைய செய்திகள்

அதிர்ஷ்டவசமாக உயிர்சேதம் எதுவும் ஏற்படவில்லை

Share:

கோலாலம்பூர், மஅர்ச் 5 -

கோலாலம்பூர், ஜாலான் சியட் புத்ரா வில் உள்ள ஆம்பூலன்ஸ் இன்சாப் மலேசியா வளாகத்திற்கு அருகே இன்று காலை 8 மணியளவில் ராப்பிட் கெல் பேருந்து ஒன்று தீப்பிடித்து எரிந்தது.

சம்பந்தப்பட்ட பேருந்து ஓட்டுநர் பழைய கிள்ளான் சாலையை நோக்கி சென்று கொண்டிருக்கும் போது திடீரென்று பேருந்து தீ பிடித்து எரிந்து சாலையோரத்தில் நிறுத்தியதாக தெரியவந்துள்ளது.

அதிர்ஷ்டவசமாக பேருந்தில் பயணித்த பயணிகள் யாருக்கும் காயம் ஏற்படாமல் உயிர் தப்பியதாக கூறப்படுகின்றது.

இதுக்குறித்து, தீயணைப்பு, மீட்புப்படை நிலையத்திற்கு கிடைக்கபெற்ற அவசர அழைப்பினை தொடர்ந்து தீயணைப்பு வீரர்கள் உட்பட வாகனங்கள் அவ்விடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டதாக தீயணைப்பு, மீட்புப்படைதுறையின் செய்தி தொடர்பாளர் அறிவித்தார்.

90 சதவீதம் பேருந்து தீயில் பாதிக்கப்பட்டிருப்பதாக தீயணைப்பு, மீட்புப்படைதுறையின் தலைவர் மொகாமட் சுஹைமி மொகாமாட் ரசாலி மேலும் குறிப்பிட்டார்.

Related News

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

சுங்கை பட்டாணியில் மர ஆலைக்கு வெடிகுண்டு மிரட்டல் - போலீஸ் விசாரணை

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

பொது அமைதிக்குக் குந்தகம் விளைவிக்கும் ரோஹிஞ்சாக்கள் மீது உடனடி நடவடிக்கை: பிரதமர் அன்வார் உத்தரவு

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

47 ஆண்டுகால நட்பின் நெகிழ்ச்சியான பொன்னிறத் தருணம்: காப்பாரில் "உறவுகள் தேடி 1979" முன்னாள் மாணவர்கள் சங்கமம்

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

8 மில்லியன் ரிங்கிட் பிணைத்தொகை கேட்டு தொழிலதிபர் கடத்தல்: நீதிமன்றத்தில் 6 பேர் மீது குற்றச்சாட்டு

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

புனித அன்னம்மாள் பேராலயத் திருவிழா: ஒரு லட்சம் பக்தர்கள் திரண்டனர்; ஒற்றுமைக்கும் குடும்பத்திற்கும் முக்கியத்துவம்!

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்

ஃபார்முலா 1 பந்தய ஏற்பாடுகளுக்கு 16 மில்லியன் ரிங்கிட் மட்டுமே தேவை: பிரதமர் அன்வார்