Oct 10, 2026
Thisaigal NewsYouTube

13 மாணவர்களுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து விலக்களிப்பு

திசைகள் செய்திப்பிரிவு
Share:
13 மாணவர்களுக்குக் கடனைத் திருப்பிச் செலுத்துவதிலிருந்து விலக்களிப்பு

கோலாலம்பூர், ஜூன்.14-

கடந்த திங்கட்கிழமை பேரா, கெரிக்கில் நிகழ்ந்த பேருந்து விபத்தில் உயிரிழந்த உப்சி பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 15 மாணவர்களில் 13 பேர், பிடிபிடிஎன்னிடம் இருந்து பெற்ற கல்விக் கடனிலிருந்து விலக்களிக்கப்படுகின்றனர் என்று உயர் கல்விக் கூட அமைச்சர் டத்தோ ஶ்ரீ ஸம்ரி அப்துல் காடீர் தெரிவித்தார்.

தக்காஃபுல் கூட்டுக் காப்புறுதித் திட்டத்தின் வாயிலாக அந்த 13 மாணவர்கள் பெற்றக் கல்விக் கடனுதவி தள்ளுபடி செய்யப்படுவதாக ஸம்ரி குறிப்பிட்டார்.

தவிர, அந்த 13 மாணவர்களுக்காக அவர்களின் குடும்பத்தினருக்கு ஈமச் சடங்கு நிதி உதவியாக தலா 1,500 ரிங்கிட் வழங்கப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.

இந்த செய்தியை பகிருங்கள்

Share this story with your friends and family

தொடர்புடைய செய்திகள்/ Related News

View all in தற்போதைய செய்திகள் →